மரங்கள் வளர்ப்பதின் அத்தியாவசியமும், முக்கியத்துவமும் சமீப
காலமாக மிகவும் வளர்ந்து வளர்வது பற்றி யாவரும் அறிந்ததே!
மேலும் குளோபல் வார்மிங்க் என்றழைக்கப்படும் புவி
வெப்பமடைதலின் விளைவுகள் பற்றியும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும்
அறிந்தே வந்திருக்கிறோம்! எனவே புவி வெப்பமடைதலைத் தடுக்கும் முக்கிய காரணியான மரங்களை வளர்த்து நம்மாலன ஒரு சிறிய உதவியை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சமுதாயத்திற்கு செய்தாக வேண்டும் என்ற உந்துதலே இக்குழுமம் மற்றும் இவ்வலைப்பூ தொடங்கப்பட்டதின் பின்னணியாகும்!
ஏனெனில் நம்மைக் காக்கும் இயற்கையைக் காக்க நம்மாலான ஒரு கைம்மாறு
குறைந்த பட்சம் நாம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும் என்பதே!
சென்னை 50 என்பது ஒரு நீண்ட பயணத்தில் நாம் எடுத்து வைக்கப் போகும் முதல் அடியாகும்! இதன் மூலம் சென்னை அல்லது சென்னையை அடுத்துள்ள கிராமப்பகுதியொன்றில் 50 மரக்கன்றுகள் மட்டும் நட்டு, அவை போதுமான வளர்ச்சி காணும் வரை அவற்றைப் பராமரித்தல் ஆகும்!
அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பின்னர் அவற்றைப் பராமரிக்க
இயலாமல் போய்விடக் கூடாதே என்பதால்தான் சிறிய தொடக்கமாக 50 என்ற
எண்ணிக்கையுடனேயே இத்திட்டத்தை நான் முன்மொழிகிறேன்!
இதன் மூலமாக பிற ஊர்களில் இருக்கும் பதிவுலகைச் சேர்ந்த, பதிவுலகில்
அல்லாத பிற நண்பர்களுக்கும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி அதிக அளவில் மரக்கன்றுகளை நடச் செய்வதும், ஆங்காங்கே பல்வேறு குழுக்களை இதன் மூலம் உருவாக்கி, அவர்களையும் அவர்களால் இயன்ற அளவில் இப்பணியை மேற்கொள்ளச் செய்ய ஊக்குவிப்பது என்பதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்!
இம்மரம் வளர்ப்பில் அனுபவம் கொண்ட நண்பர்கள் பலரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து எவ்விதத் தொய்வுமின்றி இப்பணியை நாம் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்! ஆகவேதான் இவ்விவாதங்களை குழுமம் மூலமாக மேற்கொள்வது எளிதாயிருக்குமென்று ஆர்வமுடைய இன்னும் பலரும் இக்குழுமத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இது பற்றிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், கருத்துக்களை நம்
நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்! தங்களால் இயன்ற கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!
நாம் ஒரு குழுவாகச் செயல்பட இருக்கிறோம்! தனி நபர் பயணமல்ல! இது ஒரு
குழுப் பயணம்!
இது அறிமுகப் படலம் மட்டுமே! விரைவில் மேலதிக தகவல்களுடன் இத்திட்டப்பணி குறித்து விவாதிப்போம்!
Thursday, 26 March 2009
Subscribe to:
Posts (Atom)