izmanam.com -->

Thursday, 26 March 2009

சென்னை 50 - ஒரு அறிமுகம்

மரங்கள் வளர்ப்பதின் அத்தியாவசியமும், முக்கியத்துவமும் சமீப
காலமாக மிகவும் வளர்ந்து வளர்வது பற்றி யாவரும் அறிந்ததே!

மேலும் குளோபல் வார்மிங்க் என்றழைக்கப்படும் புவி
வெப்பமடைதலின் விளைவுகள் பற்றியும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும்
அறிந்தே வந்திருக்கிறோம்! எனவே புவி வெப்பமடைதலைத் தடுக்கும் முக்கிய காரணியான மரங்களை வளர்த்து நம்மாலன ஒரு சிறிய உதவியை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சமுதாயத்திற்கு செய்தாக வேண்டும் என்ற உந்துதலே இக்குழுமம் மற்றும் இவ்வலைப்பூ தொடங்கப்பட்டதின் பின்னணியாகும்!

ஏனெனில் நம்மைக் காக்கும் இயற்கையைக் காக்க நம்மாலான ஒரு கைம்மாறு
குறைந்த பட்சம் நாம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும் என்பதே!

சென்னை 50 என்பது ஒரு நீண்ட பயணத்தில் நாம் எடுத்து வைக்கப் போகும் முதல் அடியாகும்! இதன் மூலம் சென்னை அல்லது சென்னையை அடுத்துள்ள கிராமப்பகுதியொன்றில் 50 மரக்கன்றுகள் மட்டும் நட்டு, அவை போதுமான வளர்ச்சி காணும் வரை அவற்றைப் பராமரித்தல் ஆகும்!

அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பின்னர் அவற்றைப் பராமரிக்க
இயலாமல் போய்விடக் கூடாதே என்பதால்தான் சிறிய தொடக்கமாக 50 என்ற
எண்ணிக்கையுடனேயே இத்திட்டத்தை நான் முன்மொழிகிறேன்!

இதன் மூலமாக பிற ஊர்களில் இருக்கும் பதிவுலகைச் சேர்ந்த, பதிவுலகில்
அல்லாத பிற நண்பர்களுக்கும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி அதிக அளவில் மரக்கன்றுகளை நடச் செய்வதும், ஆங்காங்கே பல்வேறு குழுக்களை இதன் மூலம் உருவாக்கி, அவர்களையும் அவர்களால் இயன்ற அளவில் இப்பணியை மேற்கொள்ளச் செய்ய ஊக்குவிப்பது என்பதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்!

இம்மரம் வளர்ப்பில் அனுபவம் கொண்ட நண்பர்கள் பலரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து எவ்விதத் தொய்வுமின்றி இப்பணியை நாம் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்! ஆகவேதான் இவ்விவாதங்களை குழுமம் மூலமாக மேற்கொள்வது எளிதாயிருக்குமென்று ஆர்வமுடைய இன்னும் பலரும் இக்குழுமத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இது பற்றிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், கருத்துக்களை நம்
நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்! தங்களால் இயன்ற கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!

நாம் ஒரு குழுவாகச் செயல்பட இருக்கிறோம்! தனி நபர் பயணமல்ல! இது ஒரு
குழுப் பயணம்!

இது அறிமுகப் படலம் மட்டுமே! விரைவில் மேலதிக தகவல்களுடன் இத்திட்டப்பணி குறித்து விவாதிப்போம்!

12 comments:

மங்கை said...

சிபி

நல்ல முயற்சி....சந்தோஷமா நானும் சேர்ந்துக்கறேன்...தென் மாவட்டங்களில், குறிப்பாக கோவில்பட்டி சாத்தூர் பகுதியில் இருக்கும் பதிவர்கள் விருப்பமுள்ளவர்கள், என் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தொலை பேசி எண்ணிற்கு அழைத்து ஆலோசனை அல்லது திட்டம் பற்றி பேசலாம்... மனதிற்கு நிறைவு தரும் ஒரு முயற்சி..கண்டிப்பாக செய்யலாம்..

அப்புறம் அந்த வர் வெரிஃகேஷனை எடுத்துடலாமே...

தமிழ் அமுதன் said...

நல்ல திட்டம்! ஒரு குழுவினை உருவாக்கி மாதம் ஒருவர் ஒரு மரம் நடவேண்டும் என்ற எளிய இலக்குடன் துவங்கினாலே பெரிய வெற்றி அடைய முடியும்!!

Santhosh said...

நல்ல திட்டம் தல..

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

Unknown said...

nanbare thankal pothu paniyil naanum ennai inaithu kolkiren nengalum ennai etru kollunkal madurai maavattathiruku ethavathu seiyya vendum sollungal kaathirukiren

சிவாஜி said...

அருமை! நான் சமீபத்தில் தான் பசுமை உலகம் என்ற தன்னார்வ சேவை அமைப்பில் உறுப்பினரானேன். உங்களின் விளம்பர பேனர்கள் நல்லா இருக்கு, நானும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
சிவாஜி
http://greenworldindia.org

Paleo God said...

இருக்கற தொட்டில கூட எதையாவது வளர்த்துகிட்டுதாங்க இருக்கன்..
மிக அவசியமான பதிவு...

சாமக்கோடங்கி said...

கோயம்புத்தூரில் இதை நாங்கள் தொடங்க இருக்கிறோம்..

உங்கள் கருத்துக்கு நன்றி..

You will be seen as... said...

sir சார், வணக்கம் ,
என்னுடைய பெயர் கார்த்தி , கரூரில் இருந்து ,

ஐயா ,

எனக்கு மரம் வளர்ப்பது , நடுவது என்பது மிகும் பிடித்த சேவை ,
மேலும் நான் மாணவன் என்பதால் , மரக்கன்று வாங்குவது , என்பது இயலாத ஒன்றாக உள்ளது,
நீகள் கொஞ்சம் எனக்கு உதவி செய்தல் நம் கரூர் பசுமை கரூர் ஆகா மாறும் என்பதில் எனக்கும் எந்த ஒரு ஐயப்படும் இல்ல,,

உங்களது பதிலுகாக காத்திருக்கிறேன்,

என்னுடைய மெயில் id , karthiface@gmail.com


நன்றி

sundars_007 said...

நல்ல முயற்சி.... I like to Join in your team and serve for our city (Chennimalai, Erode District).

Plz send your details to my mail id : wecansolutions@rediffmail.com

Thanking you,
Regards,
M.Shanmugasundaram
9994100925

Unknown said...

வணக்கம் நண்பர்களே! ஈரோட்டினை சேர்ந்த நாங்கள் முகநூல் (ஃபேஸ் புக்) மூலம் இணைந்து ஈரோடு விழுதுகள் எனும் அமைபினை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு வருட வயதுடைய முப்பத்து ஐந்து மரங்கள் பாதுகாப்பு வளையங்களுடன், தகுந்த உரங்களுடனும் அமைத்துள்ளோம், இதனை முறையாக பராமரித்து வருகிறோம்! மேலும் விபரங்களுக்கு facebook.com/erodeviludhukal

இவண்


வெங்கடேஷ் ரம
9942022200

veerasarguru said...

நாங்களும் தயார்,