ஆனாலும் அந்த திட்டம் கிணத்துல போட்ட கல்லு மாதிரியே கிடப்புல கிடந்துகிட்டிருந்தது! அப்பப்போ நம்ம தெக்ஸ் வந்து ஞாபகப் படுத்தினார். கோவைல இருந்து திரு வின்செண்டும் என்னுடன் உரையாடினார். அதன்பிறகும் அதைத் தொடங்கவே இல்லை!
கடைசியா சென்னை-ஈரோடு-கோவைன்னு பணி மாற்றலாகிட்டே இருந்து இப்ப கோவைல இருக்கேன்! சமீபத்துல கபீஷ்னு ஒரு பதிவர்கிட்டே பேசிகிட்டிருந்தப்போ திரும்ப இதைப் பத்தின பேச்சு வந்தது! ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு பாராட்டினாங்க! அதான் இனிமே இதைப் பேசறதுன்னா ஒரு மரமாச்சும் நட்டு வெச்சிட்டு/அல்லது நடுவதற்கு ஏற்பாடு செஞ்சிட்டு வந்து பேசுறேன்னு சொல்லி இருந்தேன்!
கடந்த சனிக்கிழமை நாமக்கல் போயிருந்தப்போ சென்னைல தான் முடியலை! நம்ம ஊர்ல இருந்தே ஆரம்பிப்பமேன்னு எனக்கு அண்டை வீட்டிலிருக்கும் ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவியின் உறவினர் வீட்டில் இடமிருப்பதாக அறிந்து அங்கே மரம் நடலாமா என்று கேட்டேன். இந்த சென்னை 50 திட்டம் ஆரம்பித்த கதையில் இருந்து குளோபல் வர்மிங், அதன் விளைவுகள் பற்றியெல்லாம் விவரித்தேன்! உடனே அம் மாணவி பெரிய அளவில் ஆர்வம் கொண்டு இத்திட்டத்தில் தானும் பங்கு பெறுவதாகக் கூறி அவரது தோழிகள் வீட்டிற்கு போன் செய்து விளக்கிக் கூறி இருவர் வீட்டில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பின்னர் நர்சரி கார்டனுக்கும் என்னை அழைத்துச் சென்று 8 மரங்கள் வாங்கி 3 மரக்கன்றுகளை அவரது தோழிகளின் வீட்டிற்கே சென்று கொடுத்து வந்தோம்!
மீதமிருந்த கன்றுகளை (2 வேம்பு+2 கொய்யா+1 சப்போட்டா) அவரது உறவினர் வீட்டுக்கு கொடுத்தனுப்பினோம்! மேலும் அவரது கல்லூரிக்கு வந்து அங்கு குளோபல் வார்மிங்+விழுப்புணர்வு உரை ஆற்றுவதற்கு அனுமதியும் வாங்கித் தருவதாகவும் கூறியிருந்தார்.
ஆக சென்னை 50 என்ற திட்டம் தற்போது பசுமை - 50 ஆக மாற்றம் செய்யப்படுகிறது! எங்கெங்கெல்லாம் முடிகிறது அங்கெல்லாம் மரக்கன்றுகளை நடுவதற்கு/மரக்கன்றுகள் வாங்கித் தரப்படுவதற்கு என்ற முடிவுடன் இத்திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்!
மேலும் ஆர்வம் இருப்பவர்களின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடன் இதைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது! தொடர்வோம்!
பசுமை 50
14 comments:
வாழ்த்துக்கள் பாஸ்
இது சம்பந்தமா பல்வேறு ஆசைகள் இருக்கு ! நானும் முயற்சிக்கின்றேன்!
சிபி தம்பி ஜூப்பர்! அப்படியே நட்ட மரமெல்லாம் அப்படியே இருக்கான்னு பாக்கறதுக்கு ஊருக்குள்ள ஆள் ஏற்பாடு பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கறேன்
great ..
I am with You!!!
மரம் வளர்க்கும் மாமன்னன் சிபி சக்ரவர்த்தி...! வாழ்க...! வாழ்க...!
இந்த மரம் நடுவதில் என்ன ரூல்ஸ் இருக்கு ? சும்மா ராவோட ராவா யாரு வீட்டுக்குள்ளேயாவது எகிறி குதிச்சு மரக்கன்று நட்டுட முடியுமா ? பொது இடங்களில் மரம் நட என்ன விதிமுறை? தெரிஞ்சவங்க வீட்டுல தான் மரம் நட முடியும் இல்லையா ?
வளர்த்துடுவோம்.
//முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன்!// அதென்ன தலீவா 'கிறேன்' அப்படின்னு ஒருமையில சொல்லிட்டீய, நீங்க எல்லாம் அப்படி இப்படி ஒரு வழியா செட்ல் ஆகிட்டு வரட்டுமின்னுதானே நாங்க இங்கன உட்கார்ந்திருக்கோம். சரி, ஆரம்பமே அசத்தல் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம், சட்டுபுட்டுன்னு அடுத்து என்னான்னு சொல்லுங்க - கலந்துக்கு"வோம்." அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தெக்ஸ்,
தவறுதலாக "றேன்" வந்துடுச்சு!
இப்ப மாத்திட்டோம்!
முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்!
முதலில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. பசுமைப் புரட்சி அது இது என்று வெளியில் சொல்லி விட்டு, அதைக் கடைபிடிக்காமல் கண்டுகொள்ளாமல் போவோர் மத்தியில், செய்து காட்டும் உங்களுக்கு எந்தப் பாராட்டும் பொருந்தும்...
தொடருங்கள்.. சிறு பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.. அவர்களிடமே மாற்றம் உள்ளது என்று நம்புகிறேன்..
நன்றி..
பிரகாஷ்!
மிக்க நன்றி!
அயில்யன்
ஆர்வத்திற்கு மிக்க நன்றி!
உங்களது ஆசைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்! முடிந்த உதவிகள் செய்கிறோம்!
கபீஷ்!
வீட்டில் வளர்க்க விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம்தான் கொடுக்கப் பட்டுள்ளன!
முத்துலக்ஷ்மி அக்கா, ரங்கம், ஜீவன், மஞ்சூர் ராசா
மிக்க நன்றி!
லேட்டஸ் செய்தி : 06/04/2010
(தொலைபேசித் தகவல்)
நாமக்கல்லில் நடப்பட்ட மரங்கள் துளிர்விடத் துவங்கியிருக்கின்றன! - நமது குழுமத்தைப் போலவே!
Post a Comment