மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு
மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை
அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்
பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார
அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற
செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில்
நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000
வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று
எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்
நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர
வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு
என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்
என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்
தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்
நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்
இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு
ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு
தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...
உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல
விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்
உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்
இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக
அல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்...
-நான் சக்திவேல்...
www.agriinfomedia.com
www.agripedia.in
மரம் வளர்ப்போம் வாருங்கள் குழுமத்திலிருந்து
Friday 23 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அழகான சிந்தனை...
நன்றி Sangkavi!
அருமை நண்பரே. எனக்கும் மரம் வளர்க்க ஆசை. வீட்டின் முன்பாக இருக்கும் 5 செண்ட் இடத்தில் என்ன மாதிரியான மரங்கள் வளர்க்கலாம். எத்தனை? இடைவெளி? போன்ற விவரங்கள் வேண்டும்.
எந்த ஊருக்கு வேண்டாலும் மரக்கன்றுகளை டெலிவரி பண்ணுவீங்களா..?
நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன்.. விழுதுகள் அமைப்பிடம் மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும் என்று விசாரித்துள்ளேன்.. என்னுடன் வேலை செய்யும் சக பணியாளர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில், அவர்கள் வீடுகளுக்கே சென்று மரங்கள் நட்டு, அப்படியே, அந்த மரங்களின் குணாதிசயங்கள் மற்றும் பலன்களை விளக்குவதாக உத்தேசம்.. தங்களின் உதவி தேவை.. மரங்கள் இலவசமாக கிடைத்தாலும் சரி, காசு கொடுப்பதாக இருந்தாலும் சரி.. குறைந்தது 50 லிருந்து 100 மரங்கள் வரை பகிர திட்டம்..பதிலை இங்கே அளித்தாலும் சரி, successprakash@gmail.com என்ற முகவரியில் அளித்தாலும் சரி..
உங்கள் பணி செவ்வனே அமைய வாழ்த்துகள்.. நன்றி..
அப்படியே roof gardening எனப்படுகிற வீட்டு மொட்டை மாடிகளில் செடி கொடிகளை எப்படி வளர்ப்பது என்பதை விளக்குங்களேன்... அதையும் செயல்படுத்துவேன்..
http://letsplanttrees.blogspot.com/
போத்திஸ் Pothys Social Advt for Trees
Senthil
http://tamiladvt.blogspot.com/2010/05/pothys-social-advt-for-trees.html
Pothys - Social Advt
சாமக்கோடங்கி,
அருமையான வேலை செய்றீங்க, கீப் இன் டச் வித் சிபி, மற்றும் இந்தத் தளத்துடன. நன்றி! தங்களின் ஆர்வத்திற்கு, தொடர்ந்து செயல்படுங்கள்.
மரம வளர்ப்பது மிகவும் நாளது. அதை விட இருக்கிற மரத்தை வெட்ட விடாமல் தடுப்பது மிகவும் நாளது.
வாழ்க உங்கள் பணி....
கலாசாரத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.
முடிந்தால் கருத்துக்கள் கூறவும்..
http://tamilkadu.blogspot.com
//நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்...
//
நல்ல சிந்தனை வாழ்த்துகள் நண்பா
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
எனது முதல் மரம் நடும் கனவை இப்படிக்கு இளங்கோவுடன் சேர்ந்து நிறைவேற்றி விட்டேன்.. இனி அதிகப்படியான மரங்கள் நட ஆசை.. நன்றி..
//நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்...அழகான சிந்தனை...
நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்..//
Nice thinking.
பயனுள்ள பதிவு
Post a Comment